Voice-in Contest | Win a Scientific Calculator in 5 minutes! - AGARAM.LK - TAMIL

Post Top Ad

Voice-in Contest | Win a Scientific Calculator in 5 minutes!

Share This

 

Voice-in Contest | Win a Scientific Calculator in 5 minutes!

தமிழ் மொழிக்கான பேச்சு செயலாக்கம் தொடர்பான ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கு (University Research) அதிக அளவிலான குரல் தரவுகள் தேவைப்படுகின்றன. எனவே நாங்கள் தமிழ் மொழி பேசுவோர் இடமிருந்து குரல் தரவுகளை சேகரிப்பதற்கான ஒரு திட்டத்தை தொடங்கியுள்ளோம். இத்திட்டத்திற்கான தரவுகளை சேகரிப்பதற்காக கீழே தரப்பட்ட இணைப்பில் சென்று அங்கே உள்ள சொற்றொடர்களை உங்களுடைய பேச்சுவழக்கில் வாசித்து record செய்து பதிவேற்றம் செய்வதன் மூலம் நீங்களும் இத்திட்டத்தில் பங்களிக்கலாம்.


We kindly request your help to create a Tamil speech dataset by donating your voice through this application. Data collected in this study will be used only for research purposes and in ways that will not reveal who you are.


இத்திட்டத்தின் ஒரு பகுதியாக போட்டி ஒன்றினை நடாத்துகின்றோம். இப் போட்டியில் பங்கேற்று அதிக அளவிலான குரல் தரவுகளை பதிவேற்றம் செய்வதன் மூலம் Scientific Calculator ஒன்றினை வெல்வதற்கான  வாய்ப்பினைப் பெற்றிடுங்கள்.




போட்டி விதிமுறைகள்:

  • நீங்கள் www.agaram.lk ஊடாகவோ bit.ly/voice-in-contest ஊடாகவோ போட்டியில் உள்நுழைய முடியும்.
  • போட்டியில் பங்கேற்பதற்காக குறைந்தபட்சம் 25 குரல் பதிவுகளை சமர்ப்பிக்க வேண்டும்.
  • தகுதியடையும் போட்டியாளர்கள் Scientific Calculator ஐ வெல்வதற்கான குலுக்கல் முறையிலான போட்டிக்குள் உள்நுழைய முடியும்.
  • கூடிய குரல் பதிவுகளை சமர்ப்பிப்பதன் மூலம் கூடுதலான வெற்றி வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ள முடியும். (உ+ம்: 50 குரல் பதிவுகளை சமர்ப்பிப்பதன் மூலம் 2 வெற்றிக்கான வாய்ப்பினைப் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதிகபட்சம் 6 வெற்றிக்கான வாய்ப்பினைப் பெற 150 பதிவுகளை சமர்ப்பிக்க முடியும்.)
  • சமர்பிக்கப்படும் குரல் பதிவுகள் தெளிவானதாகவும், இரைச்சல் இன்றியும் இருத்தல் வேண்டும். அவ்வாறில்லாத பதிவுகள் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படும்.
  • சமர்பிக்கப்படும் குரல் பதிவுகள் தரப்படும் வசனங்களுக்கு அமைவாக சரியானதாக இருத்தல் வேண்டும். அவ்வாறில்லாத பதிவுகள் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படும். உச்சரிப்புக்கள் உங்கள் பேச்சு மொழிநடையில் அமையலாம்.
  • வெற்றியாளரை தெரிந்து கொள்ள எமது முகப்புத்தகத்தை fb.com/agaram.lk பின் தொடருங்கள்.
  • போட்டிக்காக உங்கள் பதிவுகளை ஆனி 6ம் திகதி 2021, பி.ப. 11.59 வரை சமர்ப்பிக்க முடியும். வெற்றியாளர் ஆனி 13ம் திகதி முகப்புத்தகம் வாயிலாக அறிவிக்கப்படுவார்.

Competition Rules and Regulations:

  • You can enter the competition by visiting www.agaram.lk or bit.ly/voice-in-contest.
  • Minimum of 25 recordings should be submitted to be eligible for this competition.
  • Eligible participants will be qualified for the raffle draw to win a Scientific Calculator.
  • You can increase your winning chance by increasing your submissions. (eg: 50 voice submissions will be eligible for 2 winning chances. You can submit a maximum of 150 recordings which provide you 6 winning chances.)
  • Voice recordings must be of good quality without any external noises. The unclear recordings will be disqualified from the competition.
  • Voice recordings must align with the text displayed on the screen; improper submissions will be disqualified from the competition. 
  • Like our Facebook page fb.com/agaram.lk to get updates about the winner.
  • The competition will be open till 16th May 2021, 11:59 PM and the winner will be announced on 23rd May 2021.




Voice app ஐ பயன்படுத்துவதற்கான அறிவுறுத்தல்கள்:


படிமுறை 1: குரல் தரவு சேகரிப்பில் நீங்கள் பங்கேற்க விரும்பினால், முதல் பக்கத்தில் உங்கள் “முழுப் பெயர்”, “பாலினம்” மற்றும் “வயது” ஆகியவற்றை உள்ளீடு செய்து,  “Agree and Continue” ஐ அழுத்தவும்.

Follow these steps if you agree to participate in voice data collection:
 
Step 1: Provide your “Name”, “Gender”, and “Age” on the first page and click “Agree and Continue”.


படிமுறை 2: பின்வரும் பக்கங்களில், மருத்துவ அறிகுறிகளின் தொகுப்பை விவரிக்கும் வாக்கியங்கள் காட்டப்படும்.

“Record” ஐ அழுத்துவதன் மூலம், கொடுக்கப்பட்ட வாக்கியத்தின் பொருளை வெளிப்படுத்தும் வகையில் உங்கள் பேச்சுவழக்கில், காட்டப்படும் வாக்கியத்தைப் படியுங்கள். 

Step 2: On the following page, sentences describing a set of symptoms are displayed. Click “Record” and read the displayed sentence in your own language expressing the meaning of the given sentence.


நீங்கள் ஒரு குறிப்பிட்ட வாக்கியத்தைப் படிக்க விரும்பவில்லை என்றால், “Skip” ஐ அழுத்துவதன் மூலம் அதைத் தவிர்க்கலாம். 

பதிவு முடிந்ததும், “Stop” ஐ அழுத்துவதன் மூலம், பதிவுசெய்யப்பட்ட குரல் பதிவு துணுக்குகள் கீழே தோன்றும். குரல் குரல் பதிவை கேட்டு, அது சரியாக இல்லை என்று நீங்கள் நினைத்தால் மீண்டும் “Record” ஐ அழுத்துவதன் மூலம் பதிவு செய்யலாம்.

If you don’t want to read a particular sentence, you can skip it by clicking on "Skip". When the recording is completed, click "Stop" and the recorded file will appear below. You can listen to the audio and re-record if you think it doesn’t sound right. 


படிமுறை 3: இறுதியாக, நீங்கள் சமர்ப்பிக்க விரும்பும் பதிவின் கீழ் “Select” ஐ அழுத்தி, “Submit” ஐ அழுத்தவும். 

“Next” ஐ அழுத்துவதன் மூலம்  மேலே உள்ள செயல்முறையை மீண்டும் செய்யவும். “Next” ஐ அழுத்துவதன் மூலம் உங்களால் முடிந்தவரை பல வாக்கியங்களைப் பதிவு செய்யலாம்.

Step 3: Finally, click “Select” under the recording you want to upload and then tap “Submit”. Click “Next” and repeat the above procedure. You can record as many sentences as you can by clicking “Next”

படிமுறை 4: உங்கள் பதிவுகளை சமர்ப்பித்து முடித்ததும், “Exit” ஐ அழுத்தவும்.

Step 4: When you are done, tap "Exit"

படிமுறை 5: நீங்கள் போட்டியில் பங்கேற்க விரும்பினால், வெளியேறும் பக்கத்தில் உங்கள் தொடர்பு விவரங்களை வழங்கவும்.

Step 5: If you wish to take part in the competition, provide your contact details on the exit page by clicking on “Contact Details”.



உங்களுடைய பங்களிப்பு தமிழ் மொழிக்குரிய பேச்சு தொழில்நுட்பங்களை உருவாக்க பயனுள்ளதாக அமையும். உங்களிடமிருந்து சேகரிக்கப்படும் தரவுகள் ஆராய்ச்சி நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்று உறுதிமொழி வழங்குகின்றோம்.





1 comment:

  1. Merkur Solingen 500Ti - Titanium Sports
    Merkur Solingen 500Ti - Classic Car Racing titanium septum jewelry Safety Razor - Made in titanium legs Germany. titanium price A chrome suppliers of metal finished 10-piece workpiece. Rating: 5 · ‎6 titanium bike reviews

    ReplyDelete

Post Bottom Ad